முக்கிய செய்திகள்

ஜெ.தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி நபர் தப்பியோட்டம்..


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குடியிருக்கும் தி.நகர் வீட்டில் இன்று காலை ஒரு நபர் வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி சோதனை செய்ய வந்திருப்பதாக தெரிவித்தார்.
10 மணிக்கு மற்ற அதிகாரிகள் வந்த பின் சோதனை செய்யவுள்ளதாக தெரிவித்தார். ஜெ.தீபா வழக்கறிஞர் சோதனை குறித்து தி.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து விசாரித்த போது மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.சோதனை நடத்த வந்த நபர் போலியானவர் என போலீசாரி தெரிவித்தனர். தப்பியோடியவரை போலிசார் தேடிவருகின்றனர்