முக்கிய செய்திகள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது ..

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 8-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது.

இன்று மாலையுடன் இந்த தேர்தலுக்கான பரப்புரை முடிவடைய உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.