டெல்லி – வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரயில்: சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..

டெல்லி-வாரணாசி இடையே ரயில்-18 எனப்படும் நவீன விரைவு ரயில்சேவை முதன்முதலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 18 மாதத்தில் தயாரிக்கப்பட்டது.

என்ஜின் இல்லாமல் நவீன வசதிகளுடன் வந்தேபாரத் விரைவு ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெல்லி-வாரணாசி இடையேயான சுமார் 800கி.மீ. தொலைவை 8 மணி நேரத்தில் ரயில் கடக்கும். ஜிபிஎஸ் பயணிகள் தகவல் தொடர்பு முறை, சிசிடிவி, அவசரதேவைக்கு ரயில் ஓட்டுனருடன் பேசும் வசதி உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ சென்சார் வசதியுடன் கூடிய கழிவறைகள் போன்ற நவீன வசதிகள் உள்ளன.

டெல்லி-வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை தொடங்கி வைத்து ரெயிலின் உள்ளே சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.

விழா தொடங்குவதற்கு முன் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

டெல்லி-வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேற்றுமைகளை மறந்து பயங்கரவாதத்தை ஒன்றாக நின்று எதிர்க்க வேண்டும். உலகநாடுகள் ஒற்றுமையாக செயல்பட்டால் பயங்கரவாதம் அதிக நாட்கள் நீடிக்காது.

தாக்குதலுக்கு பயந்து இந்தியா அச்சத்தில் உறைந்து விடாது.

இவ்வாறு அவர் கூறினார்.