முக்கிய செய்திகள்

டெல்லியில் புழுதிப்புயலுடன் கனமழை : விமானப் போக்குவரத்து பாதிப்பு..


டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று மாலை புழுதிப்புயல் வீச தொடங்கிவுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் சில நாட்கள் வட மாநிலங்களில் புழுதி புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 70 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இன்று ( 13 ம் தேதி) மாலையில் திடீர் புழுதி புயல் வீசியது. மேலும் காஸியாபாத், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
டெல்லியில் இருந்து வெளியூர் கிளம்பும் விமானங்கள் புறப்படவில்லை. டெல்லிக்கு வரும் விமானங்கள் மாற்று நிலையங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.