முக்கிய செய்திகள்

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க, 7 தனிப்படைகள் அமைப்பு..


தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேலை பிடிக்க, 7 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர்.

டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று தலைமைச் செயலகம் சென்றுள்ளனர்.

அங்கு போலீசார் அனுமதியை மீறி, உள்ளே நுழைந்தனர். நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உறவினர்களுக்கு தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்திருப்பதாக இருவரும் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையில் அரசு ஊழியர்களை தாக்க முயன்றதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றிவேல் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெற்றிவேலின் வீடு மற்றும் அலுவலகங்களில் விசாரித்து வருகின்றனர்.