முக்கிய செய்திகள்

திமுகவை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2ஜி வழக்கு தொடரப்பட்டது : ஸ்டாலின்..


2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 14 விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் வரலாற்றில், ஒரு கட்சியை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பால் திமுக மீதான களங்கம் துடைக்கப்பட்டு விட்டது.