முக்கிய செய்திகள்

முதல்வர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சந்திப்பு : ஸ்டாலின் வரவேற்பு..


சென்னை கொளத்துாரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்..

காவேரியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடியின் அறிவிப்புக்கு எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத் தக்கது என குறிப்பிட்டார்.

பேருந்து கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தும் போராட்டங்கள் குறித்து விவாதிக்க பிப்.6- ந்தேதி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

கட்டண உயர்வை எதிர்த்து போராடும் மாணவர்களை அரசு ஒடுகக நினைக்க கூடாது அவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்ப்பெற வலியுறுத்தினார்.