தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு…

மீண்டும் ரூ.23,300 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

நேற்று சிறிதளவு குறைந்த தங்கம் விலை, இன்று (பிப்.,23) மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.23,300 ஐ கடந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40ம், கிராமுக்கு ரூ.5 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2914 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,140 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,312 க்கு விற்பனையாகிறது. இதே போன்று ஒரு கிராம் வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து ரூ.41.60 ஆக உள்ளது.