முக்கிய செய்திகள்

மருமகன் பிரிட்டன் அமைச்சரானதில் மகிழ்ச்சி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி…

தனது மருமகன் பிரிட்டன் அமைச்சரவையில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் அக்ஷதாவுக்கும் கணவர் ரிஷி சுனக் 2015 மற்றும் 2017-ல் நார்த் யார்க்ஷைரில் உள்ள ரிச்மாண்ட் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியானவர்.

தற்போது புதிதாக பிரிட்டன் பிரதமராகியுள்ள போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

தனது மருமகன் பிரிட்டன் அமைச்சராகியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாராயணமூர்த்தியும், சுதா மூர்த்தியும், கடுமையாக உழைத்து,

நேர்மையாக செயலாற்றி, சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றும், மக்களின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.