முக்கிய செய்திகள்

கர்நாடக முதல்வராக 4வது முறையாக எடியூரப்பா பதவியேற்பு..

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார். எடியூரப்பாவுக்கு கவர்னர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

குமாரசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுள்ளார்.

ஒரு வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் காலக்கெடு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.