முக்கிய செய்திகள்

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது சிக்கல்..


எச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் கணவர் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எச்1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி / கணவர்/ குழந்தைகளுக்குகளுக்கு எச் – 4 விசா வழங்கப்படுகிறது. 2015ம் வருடம் சிறப்பு உத்தரவு மூலம், வேலைக்கான அனுமதி பெற்று பணி செய்து கொள்ள ஒபாமா நிர்வாகம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை:

கடந்த 2017 ஜூன் புள்ளிவிவரப்படி, எச்1பி விசா பெற்றவர்களின் 71,287 உறவினர்கள் வேலை உத்தரவாத கடிதங்களை பெற்றனர். இதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2015ம் வருடம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. இதனால், பல ஆயிரம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அமெரிக்க குடிமகன் மற்றும் குடியேற்றத்துறை இயக்குநர் பிரான்சிஸ் கூறியதாவது: எச்4 விசா வைத்திருப்பவர்கள் பணி செய்ய, அனுமதி வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.