கொத்து.. கொத்தாக… தலைமுடி உதிர்கிறதா..!

பொதுவாக பெண்களும், ஆண்களும் கவலை கொள்ளும் விசயம் என்றவென்றால் அது தலைமுடி உதிர்வே..

எத்தனையோ வகைவகையான எண்ணெய்களைத் தேய்த்தும் முடி உதிர்வது நிற்க வில்லை என்ற கவலையாக உள்ளீர்ரா.. கவலை வேண்டாம் இதோ.. உங்கள் சமையல் அறையிலிருந்து வருகிறது நிவாரணம்.

தினமும் தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிர்கிறதா? இதனை நினைத்து அதிக மன வேதனை அடைகிறீர்களா?

உங்கள் முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளது. ஆம், உங்கள் கூந்தல் உதிர்வதைக் கட்டுப்படுத்தும் அந்த சிறப்பான பொருள் எது என்று தெரியுமா? அது பூண்டு.

ஆம் தலைமுடி உதிர்வைத் தடுக்க நம் சமையல் அறையில் அன்றாடம் நாம் உணவாக பயன்படும் பூண்டு தான்

பூண்டுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்… முயற்சி செய்வோமா..

இந்திய சமையலில் மிகவும் பிரபலமான ஒரு உணவுப்பொருள் பூண்டு. உணவின் சுவையை அதிகரிக்கும் பூண்டு,

மிக அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்ட ஒரு உணவுப்பொருள். முடி உதிர்வைக் கட்டுப்படுத்த சிறப்பான முறையில் செயல்புரிகிறது பூண்டு.

பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட பண்புகள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகின்றன. பூண்டு எவ்வாறு வேலை புரிகிறது? பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது.

அவை, . பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது. .

பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது .

பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. . முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது,

இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது. . தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.

பூண்டு மற்றும் தேங்காய் எண்ணெய் கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது.

இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும்.

இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

வாரம் இருமுறை செய்து வந்தால் முடி உதிர்வது நின்று போகும்..