நெரிசலால் திணறும் காரைக்குடி : போக்குவரத்து காவலர்களை அதிகரிக்க நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வலியுறுத்தல்..

காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை

பண்பாடு,காலாச்சாரம்,கல்வி என சிறப்போடு விளங்கும் செட்டி நாட்டின் முக்கிய நகரமான காரைக்குடி தற்போது அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் திணறிவருகிறது. பொதுமக்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர். நெரிசலைக் குறைக்க சிவகங்கை மாவட்ட காவல்துறை அதிக போக்குவரத்துக் காவலர்களை நியமிக்க வேண்டும் என காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை வலியுறுத்தியுள்ளார்.


வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில் காரைக்குடியில் அவற்றை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவலர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த பல வருடங்களாக இதே நிலைதான் நீடிக்கிறது. போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர். இதனால் நகர் முழுவதும் நெரிசல் அதிகரித்துள்ளது.
காரைக்குடியில் முதல் பீட்,இரண்டாவது பீட், பெரியார் சிலை, ராஜீவ் காந்தி சிலை, கழனிவாசல்,நடராஜா தியேட்டர்,வாட்டர் டாங்க், வருமானவரி அலுவலகம்,புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து காவலர்கள் பணிபுரிந்தால்தான் நகரின் நெரிசலுக்குத் தீர்வாகும். பள்ளி,கல்லுாரி நேரங்களில் போக்குவரத்துக் காவலர்களின் தேவை முக்கியமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த நகராட்சிக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறைக்கு நகராட்சி சார்பில் போக்குவரத்துக் காவலர்களை அதிகரிக்க வலியுறுத்தினோம், ஆனால் இன்று வரை அதிகரிக்கப்படவில்லை. காரைக்குடி நகரின் போக்குவரத்து நெரிசலை சீராக்க போக்குவரத்து காவலர்களை மாவட்ட காவல்துறை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


அன்றாடம் போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் பொதுமக்களின் கோரிக்கையும் இதுவே.
சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் காரைக்குடி சரக காவல் துறை அதிகாரிகள் போக்குவரத்து காவலர்களை அதிகம் நியமித்து நகர நெரிசலை தவிர்க்க வழிவகை செய்யுங்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்