இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரி அல்ல:மு.க.ஸ்டாலின்…

காலமான பிறகும் கலைஞரை கொச்சைப்படுத்த அதிமுக முயற்சி செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து, நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், திமுக இந்துவிரோதக் கட்சி என அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அப்படி என்றால் திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் யார் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரி அல்ல என உறுதிபடத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரண விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த ஓபிஎஸ், தற்போது ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இதுவரை ஆஜராகவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

கலைஞர் மறைந்தபோது மெரினாவில் 6 அடி நிலம் கொடுக்க மறுத்தவர்கள், காலமான பிறகும் கலைஞரை கொச்சைப்படுத்த முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் வேதனையுடன் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் அனுமதித்திராவிட்டாலும்கூட கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்திருப்போம் என அவர் கூறினார்.