முக்கிய செய்திகள்

ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு: 16வது நாளாக பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்…

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு பழ. நெடுமாறன் ஆதரவு தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருக்கராவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து 16வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படவேண்டும் என வலியுறுத்தினார்.