இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்தது..

கரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களி்ன் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ளது,

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர், 1,993 பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து நேற்று அதிகபட்சமாக பாதிப்பு எண்ணிக்கை முதல்முறையாக 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25,0007 ஆகவும், 8,888 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்தம் 73 உயிரிழப்புகள் நேற்று நிகழ்ந்துள்ளளன. இதில் மகாராஷ்டிராவில் 27 பேர், குஜராத்தில் 17 பேர், மேற்கு வங்கத்தில் 11 பேர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 7 பேர், டெல்லியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

”மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 459 ஆகவும், அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று பலி எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் பலியானோர் எண்ணிக்கை 59 பேரும், ராஜஸ்தானில் 58 பேரும் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் நேற்று உயிரிழப்பு இல்லாததால் 26 பேர் என்ற எண்ணிக்கை தொடர்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் 27 பேர், கர்நாடகாவில் 21 பேர், மேற்கு வங்கத்தில் தலா 33 பேர், பஞ்சாப்பில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 8 பேரும், கேரளாவில் 4 பேரும், ஹரியாணா, ஜார்க்கண்ட், தலா 3 பேரும் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 10,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,773 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 3,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1094 பேர் குணமடைந்துள்ளனர்.

குஜராத்தில் 4,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,584 பேரும், தமிழகத்தில் 2,323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தமிழகத்தில் 1,258 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2,660 பேரும், தெலங்கானாவில் 1,038 பேரும், கேரளாவில் 497 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 383 ேபர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2,203 பேர், ஆந்திரவில் 1,403 பேர், கர்நாடகாவில் 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 614 பேர், மேற்கு வங்கத்தில் 795 பேர், பஞ்சாப்பில் 357 பேர், ஹரியாணாவில் 313 பேர், பிஹாரில் 418 பேர், அசாமில் 42 பேர், உத்தரகாண்ட்டில் 57 பேர், ஒடிசாவில் 142 பேர், சண்டிகரில் 56 பேர், சத்தீஸ்கரில் 40 பேர், லடாக்கில் 22 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 109 பேர் , அந்தமான் நிகோபர் தீவில் 33 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புதுச்சேரியில் 5 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசத்தில் யாரும் பாதி்க்கப்படவில்லை, மிசோரத்தில், ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்”.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.