இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம்..

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம்.

எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும்.

எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும் எனத் தனது டிவிட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.