இந்தியாவில் மேலும் 5,611 பேருக்கு கரோனா தொற்று…

இந்தியாவில் மே 20ம் தேதி காலை 9:15 மணி நிலவரப்படி, கரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,139 லிருந்து 1,06,750 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை 3,163 லிருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 39,173 லிருந்து 42,298 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, 140 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 61,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிய 50 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா பாசிட்டிவ். உ.பி.யில். 4,926 கரோனா பாசிட்டிவ் கேஸ்கள் உள்ளன.

திங்கள் மாலை முதல் நிகழந்த 140 கரோனா மரணங்களில் 76 பேர் மகாராஷ்ட்ராவிலும், 25 பேர் குஜராத்திலும் மேற்கு வங்கம் மற்றும் ம.பி.யில் தலா 6 பேரும், ராஜஸ்தான், உ.பி.யில் தலா 5 பேரும், தமிழகம் மற்றும் கர்நாடாகவில் முறையே 3 பேரும், ஆந்திரா, அஸாம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா இருவரும் ஒடிசா மற்றும் பஞ்சாபில் தலா ஒருவரும் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

மஹாராஷ்டிரா – 37,136
தமிழகம் – 12,448
குஜராத் – 12,140
டில்லி – 10,554
ராஜஸ்தான் – 5,845
ஆந்திரா – 2,532
தெலுங்கானா – 1,634
கர்நாடகா – 1,397
கேரளா – 642