இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு ..


இந்தோனேஷியாவின் லோம்பாக் தீவுப்பகுதியில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தது.

முக்கிய சுற்றுலாத்தலமான லோம்பாக் தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் மற்றும் பின்னர் என சில நிமிடங்களாக நிலஅதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், கடந்த 2004ம் ஆண்டில் 9.1 ரிக்டர் அளவாக ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆழிப்பேரலையில் ( சுனாமி) சிக்கி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.