இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலா : உண்மை இல்லையென வங்கி விளக்கம்..


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலானதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் வெறும் வதந்தி எனவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணிய குமார், GFX IN இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திவாலாகி இருப்பதாக வரும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்தார்.

வங்கி கடந்த நிதியாண்டில் நஷ்டமடைந்தது உண்மைதான் என்று கூறிய அவர், தற்போது வாராக்கடன்களை வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதால், கடந்த 3 மாதத்தில் வங்கி 131 கோடி ரூபாய் லாபம் பெற்றிருக்கிறது என்று தெரிவித்தார்.

வங்கியில் கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில் செய்பவர்கள் நலிவடைந்து விட்டால் மீண்டும் கடன் வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தயாராக GFX OUT இருப்பதாகவும் சுப்பிரமணியகுமார் தெரிவித்தார்.