ஐபிஎல் : பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் பெங்களூர், பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 2 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

இந்த முறையாவது கோஹ்லி தலைமையிலான அணி கோப்பை வெல்ல முடிவெடுத்தது. சென்ற போட்டியில் அந்த அணி கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டி தற்போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்தது.

இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. பழைய வீரர்களே அணியில் இடம்பெற்றனர். இந்த போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்து வீசியது. உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தார். பஞ்சாப்பில் ராகுல் அதிகமாக 47 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில்  19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பஞ்சாப் 155 ரன்களில் சுருண்டது.

அதன்பின் பஞ்சாப் அணியும் ஸ்பின்னில் மிரட்டியது. ஆனால் பெங்களூரின் வலுவான பேட்டிங் ஸ்டைல் அந்த அணியை இலக்கை நோக்கி முன்னேற வைத்தது. ஏ பி டிவில்லயர்ஸ் அதிரடி அரை சதத்தால் பெங்களூர் அணி எளிதாக வெற்றி பெற்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் 159 ரன்கள் எடுத்து பெங்களூர் வெற்றி பெற்றுள்ளது.