முக்கிய செய்திகள்

ஐபிஎல் : சென்னை அணி பேட்டிங்..


புனேயில் நடைபெறும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2018-ன் 30வது போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயஸ் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

சென்னை அணி வருமாறு: வாட்சன், ராயுடு, ரெய்னா, டுபிளெசிஸ், தோனி, ஜடேஜா, பிராவோ, கரண் ஷர்மா, ஹர்பஜன் சிங், லுங்கி இங்கிடி, கேஎம்.ஆசிப் (கேரளா வேகப்பந்து வீச்சாளர்).

டெல்லி அணி: பிரிதிவி ஷா, கொலின் மன்ரோ, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த், கிளென் மேக்ஸ்வெல், விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, லியாம் பிளங்கெட், அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், டிரெண்ட் போல்ட்.

தோனி: மும்பை இந்தியன்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் இந்தப் பிட்சில் கொஞ்சம் வேகம் உள்ளது. நாங்கள் எம்மாதிரியான பந்துகளை வீச வேண்டுமென்ற தெரிவு முக்கியம். நாங்கள் பெரிய பீல்டிங் அணியல்ல. சில மாற்றங்கள் செய்துள்ளோம். டுபிளெசிஸ், லுங்கி இங்கிடி, ஆசிப், கரண் சர்மா ஆடுகின்றனர், என்று கூறி தோனி சுருக்கமாக முடித்துக் கொண்டார்.