முக்கிய செய்திகள்

ஐபிஎல்: கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐதரபாத் அணி வெற்றி..


ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதப்போகும் அணியை தீர்மானிக்கு குவாலிபையர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் கொல்கத்தா – சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக விருத்திமான் சஹா 35 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் குலதீப் யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்தில் சென்னையை எதிர்கொள்ளவுள்ளது.

பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்து 13 ரன்களில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. ஐதரபாத் அணி 13 ரன்களில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.