முக்கிய செய்திகள்

இஸ்ரோ ராக்கெட் ஏவுவதை பொதுமக்கள் நேரில் பார்க்க அனுமதி..

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. இதனை மக்களும் காண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது

குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ செய்தி தொடர்பாளர் விவேக் சிங், ராக்கெட் ஏவப்படுவதை மக்கள் பார்க்கும் வகையில், 5 ஆயிரம் பேர் அமரும் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

இந்த அரங்கில் இந்தியர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், பத்து வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே , இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்,

அரசுகள் வழங்கிய அடையாள அட்டை உள்ளவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

வருகிற 1-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏவப்படுவதை மக்கள் நேரடியாக பார்க்கலாம்.