முக்கிய செய்திகள்

ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை..


சென்னை ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனையில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, ஜெயாடிவிக்கு தொடர்புடைய மேலும் சில இடங்களிலும் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தினகரன் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. போலி நிறுவனங்களை தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதாக ளமல்லி காட்டியதாக புகார் எழுந்ததை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.
சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி கந்தர்வகோட்டையில் உள்ள செங்கமலத்தாயார் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் டாக்டர் வெங்கடேஷ் சசி அண்ணன் சுந்தரவத்தனத்தின் மகன், மற்றும் திவாகரன் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.