காமராஜரின் 121 ஆவது பிறந்த தினம்: காரைக்குடியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மாங்குடி எம்எல்ஏ மரியாதை…

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காரைக்குடியில் அவரது உருவச்சிலைக்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார்.
கர்மவீரர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் இன்று . இதையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புது சந்தைப்பேட்டை ஸ்ரீ காமராஜ் மெமோரியல் நாடார்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்த மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காரைக்குடி தெற்கு தெருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்களை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அளித்தார். இந்நிகழ்விலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்
செய்தி & படங்கள்
சிங்தேவ்