முக்கிய செய்திகள்

காரைக்கால் “மாங்கனி திருவிழா“வில் இன்று திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..


இறைவன் சிவனால் “அம்மையே“ என்ற அழைத்த காரைக்கால் அம்மையாரின் திருமணம் நிகழ்வு இன்று காரைக்காலில் நடைபெற்றது. 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையார் என்ற புனிதவதியாரின் வாழ்க்கையே மாங்கனி திருவிழாவாக ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரில் பாரதி வீதியில் தனி ஆலயமே அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது.
காரைக்காலில் நேற்று தொடங்கிய மாங்கனி திருவிழாவில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. இன்று விமர்சையாக புனிதவதியாருக்கும் பரமதத்தருக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

நாளை முக்கிய நிகழ்வான கைலாச நாதர் பிச்சாண்டவர் கோலத்தில் மாங்கனி இறைத்தல் நடைபெறவுள்ளது.