காரைக்குடியில் ரூ- 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை : மாங்குடி எம்எல்ஏ தலைமையில் பூமிபூஜை ..

காரைக்குடி கழனிவாசலில் வார சந்தை பின்புறம் உள்ள மயானத்தில் 1.45 கோடியில் எரிவாயு தகன மேடை நகர் மன்ற தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் சே. முத்துதுரை அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.


விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களும், நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் அவர்களும், நகர்மன்ற துணைத் தலைவர் குணசேகரன் அவர்களும், நகர்மன்ற உறுப்பினர்கள் துரை நாகராஜன்,பசும்பொன் மனோகரன், முகமது சித்திக்,லில்லி தெரசு, தனம் சிங்கமுத்து, மைக்கேல், மெய்யர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்