காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஏற்றி வைத்தார்.

தமிழக பல்கலைக் கழகங்களில் முதன் முறையாக மிகப் பெரிய 100 அடி கொடிக்கம்பத்தில் 20 மீ., அகலமும்,30 மீ நீளமும் கொண்ட தேசிய கொடியை ஏற்றி 73-வது சுதந்திரதினத்தில் சிறப்பு செய்துள்ளது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.

திருச்சி,மதுரை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக இந்த கொடிமரம் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றிய துணைவேந்தர் ராஜேந்திரன் சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் வரலாறு குறித்து ஆய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் விழாவில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் தங்க வேலுவின் மனைவி இன்பவள்ளி கௌரவப்படுத்தப்பட்டார்.

இதுபோல் எல்லையில் வீரமரணம் அடைந்த இளையாங்குடியைச் சேர்ந்த எல்கை பாதுகாப்பு படை வீரர் இளையராஜாவின் மனைவி செல்வியும் கௌரவப்படுத்தப்பட்டார்.