காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மகளிர் தினவிழா : சாதனை புரிந்த இரு பெண்கள் கௌரவிப்பு…

சர்வதேச மகளிர் தினம் வருடம் தோறும் மார்ச்-8-ஆம் தேதி உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெகு விமர்சையாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் வெவ்வேறு நிலைகளில் போராடி வென்று சாதனைபடைத்த இரு பெண்களை அழைத்து பாராட்டி கெளரவப்படுத்தியது.

செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் குமரேசன் அவர்களின் ஆலோசனையின் படி மகளிர் தினத்தில் புதுவிதமாக போராடி வென்று சாதனை படைத்தோர் இருவருக்கு பாராட்டு நடத்த ஏற்பாடு செய்தனர் பள்ளி நிர்வாகத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகில் உள்ள சிரமம் கிராமத்தில் சாதனை புரிந்த தேவி என்ற பெண் பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டார்.

தேவி கிராமத்தில் வாழ்ந்து உயர் படிப்புகள் ஏதும் படிக்காமல் தன் சொந்த முயற்சியில் சிரமம் பகுதியைச்சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த தேவி தன் முயற்சியால் இன்று பல மாநிலங்களுக்கு நெல்லை நேரடியாக அனுப்பி தன் பொருளாதார நிலையும், தன் சுற்றுபுற கிராமக்களுக்கு அவர்கள் விளைவித்த நெல்லுக்கு போதிய விலை கிடைக்கச் செய்தார். தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளார். சாதனை படைத்த பெண்ணாக தேர்ந்தடுத்து செட்டிநாடு பப்ளிக் பள்ளி பாராட்டி கெளரவித்தது.

மற்றொரு சாதனைப் பெண்ணாக சிவகங்கை கல்லுாரியில் பணியாற்றும் பேராசிரியர் ஹேம மாலினியை பாராட்டி கௌரவித்தனர். இவர் சிறந்த கல்வியாளராக விளங்குவதுடன் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பேராசிரியர் ஹேம மாலினியை பாராட்டி செட்டிநாடு பப்ளிக் பள்ளி கௌரவப்படுத்தியது.

விழாவில் இரு மகளிரையும் பாராட்டி கொளரவப்படுத்திய பள்ளியின் தாளாளர் குமரேசன் பேசும் போது பெண்களுக்கு 1920 -ஆண்டுதான் இங்கிலாந்தில் வாக்கு உரிமையை போராடி பெற்றனர். பெண்களுக்கு கல்வி அவசியம், கல்விதான் தைரியத்தைக் கொடுக்கும். அதுபோல் தைரியம் எந்த உயர்வுக்கு கொண்டு செல்லும் என்பதை மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ளவே இருவேறு நிலைகளில் உயர்ந்த இவ்விரண்டு பெண்களையும் பாராட்டி கெளரவப்படுத்தினோம் என்றார்.

பின்னர் பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பள்ளி முதல்வர் நன்றியுரை நிகழ்த்தினார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்