கர்நாடகாவில் முழுயடைப்பு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு..


மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இன்று காலை 6 மணி முதல் முழுயடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் பேருந்துகள் இயங்கவில்லை.

மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் பிரதமர் தலையிட வேண்டும் என கன்னட அமைப்புகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.

கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து முழுயடைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு பின் கர்நாடகாவிலிருந்து தமிழக பேருந்துகள் கிளம்ப முடியும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பந்த் காரணமாக தலைநகர் பெங்களூருவில் சாலைகள் வெறிச்சோடியது. கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.