கருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்தி அண்ணா அறிவாலயம் வருகை

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோா் சென்னை வந்தனா்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வா் நாராணசாமி உள்ளிட்டோா் சென்னை வருகின்றனா்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இந்தி நடிகர் சத்ருக்ணசின்ஹா, நாசர், பிரபு, வடிவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.