காஷ்மீர் சிறப்பு சலுகை விவகார வழக்கு: அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைப்பு


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கும் சட்டப்பிரிவு 35 (ஏ) வை எதிர்த்தும், அந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு (தேதி குறிப்பிடப்படவில்லை) ஒத்தி வைத்தத.

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் சிறப்பு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத கட்சிகளின் தலைவர்கள் காஷ்மீரில் முழு கடையடைப்பு மற்றும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். காஷ்மீர் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் குறைந்த பணியாளர்களே வந்தனர். 35ஏ சட்டப்பிரிவு பற்றி உச்சநீதிமன்றம் விசாரிப்பது மாநிலத்தின் ஜனநாயக உரிமையை மாற்ற நினைக்கும் முயற்சி என பிரிவினைவாதிகள் குற்றம்சாட்டினர்.

பதற்றம் காரணமாக பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த காஷ்மீர் சிறப்பு சலுகை ரத்து வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டன.