முக்கிய செய்திகள்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..


குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். குரங்கணி காட்டுப்பகுதியில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது என்றும், உரிய பாதுகாப்பை செய்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை தர ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.