இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே…

இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி அவரை பிரதமராக அந்நாட்டு அதிபர் சிறிசேனா நியமித்தார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இதே நேரத்தில் முன்னாள் பிரதமர் ரணிலுக்கு 122 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று இலங்கை உச்சநீதிமன்றமும் தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். அவரது மகன் நமல் ராஜபக்சே இதனை உறுதி படுத்தி உள்ளார்.

இந்நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்கரமசிங்கே சனிக்கிழமை அன்று பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பில் உள்ள பிரதமர் இல்லமான அலரி மாளிகையில் அவரை, உயர் அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் வெள்ளிக்கிழமை அன்று சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.