முக்கிய செய்திகள்

மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..


தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் அதிக வேதிப் பொருட்கள் இருப்பதாகவும் தரமற்றவையாக உள்ளதாகவும் ஸ்ரீராம் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுபானக் கடைகளுக்கு விற்கப்படும் மதுபானங்களை தயாரிக்கும் 17 மதுபான ஆலைகளைில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களை ஆய்வு செய்து டிச.22-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.