முக்கிய செய்திகள்

மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் சோதனை..


மதுரை சிம்மக்கல் வைகை ஆற்றின் கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சோதனை நடத்தினர்.