மதுரவாயல்- துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..

மதுரவாயல்- துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்ட மதுராவயல்-துறைமுகம் சாலை திட்டத்தில் துாண்களே சாட்சிகளாகவுள்ளன. தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புது தகவல் வெளியட்டுள்ளது.

நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை ஈரடுக்கு மேம்பாலத்துடன் மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயார் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது. பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் 20.656 கி.மீ நீளத்திற்கு ரூ.5,855 கோடியில் பறக்கும் சாலை திட்டம் அமைக்கப்பட்டது. விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்தது.