முக்கிய செய்திகள்

மத்திய பிரதேச இடைதேர்தல் காங்.,வேட்பாளர் வெற்றி..


மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடை தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

மாநிலத்தில் மாங்கவுலி மற்றும் கோலாராஸ் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடை தேர்தல் நடைபெற்றது. மாங்கவுலி சட்டப்பேரவை தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோலாராஸ் தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இருப்பினும் இத் தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் மாங்கவுலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரிஜேந்திரா சிங் யாதவ் பாஜக., வேட்பாளரை விட 2 ஆயிரத்து 124 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.