மோடி அரசின் கைப்பாவை தான் அதிமுக அரசு : சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்

ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம். பிரதமர் மோடி நாட்டுக்கு துரோகம் செய்கிறார்.

டெல்லியில் விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா என்று அவர் வினைவினார்.

மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு மாறிவிட்டது.