நக்கீரன் கோபால் விடுதலை: சிறையிலடைக்ககுமாறு உத்தரவிட நீதிபதி மறுப்பு

ஆளுநர் பன்வாரிலால் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், மாலையே விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவரை, சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்போது அவரைப் பார்க்கச்சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு போலீசார் அனுமதி்மறுத்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்த்தில் ஈடுபட்ட வைகோவை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக சென்று நக்கீரன் கோபாலைச் சந்தித்தார். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 124 பிரிவின்படி, ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போடப்பட்ட வழக்கு செல்லாது என கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். அவருடன், தி இந்து பத்திரிகை ஆசிரியர் என.ராம், நேரடியாக நீதிமன்றத்திற்கே சென்று நீதிபதி்முன் ஆஜராகி வாதிட்டார். புகார் அடிப்படையிலேயே தவறானது என்பதை நீதிபதியிடம் ராம் எடுத்துரைத்தார். இதையடுத்து, நக்கீரன் கோபால் சிறையிலடைக்குமாறு உத்தரவிட முடியாது என நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து கோபால் உடனடியாப விடுதலை செய்யப்பட்டார். தமக்கு ஆதரவளித்த திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கோபால் அப்போது நன்றி தெரிவித்தார்.

 

Nakkeran Gopal released