முக்கிய செய்திகள்

நரபலி கேட்கும் நீட்டை நிறுத்துக :மு.க.ஸ்டாலின் அறிக்கை..

ஆண்டுதோறும் நரபலி கேட்டும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் எழுத எர்ணாகுளம் சென்ற மாணவனின் தந்தை மரணத்துக்கு மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று கூறினார்.

தமிழக மாணவர்களை நீட் தேர்வெழுத வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதன் விளைவாக, எர்ணாகுளம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது