முக்கிய செய்திகள்

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்…

அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தில், இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்ற வானிலை மையம்

திருச்சி, மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கரூர், பெரம்பலூர், சேலம் ஆகிய இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் ஏழு செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவமழை, அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see… MR.லோக்கல் படம் சரியாக போகல… அடுத்த படம் இப்படி இருக்காது