சங்கராபுரம் ஊராட்சி தலைவர் வழக்கு: ஊராட்சி பொதுநிதி பணம் ரூ. 36,17,500 வீணடிப்பு..

சங்கராபுரம் ஊராட்சி மன்ற கூட்டத்தில்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள பொது நிதியிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் வழக்குக்கான ரூ.36,17,500 உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் கொடுக்கப்பட்டுள்ளது.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய 6-வார்டு உறுப்பினர் சொக்கலிங்கம் பேசும் போது,

தனிப்பட்ட இருவரின் வழக்குகாக மக்கள் வரிப்பணத்தில் உள்ள ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.36,17,500 கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்பு தெரிவித்தார். ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கு நிதியில்லாத போது இந்த வழக்குக்காக இவளவு பெரிய தொகை ஏன் கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி கொடுத்தார். இந்த நிதியிலிருந்து சாலை அமைத்தல் போன்ற பல அத்தியாவசியத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம், சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள மக்களின் வரிப்பணத்தை வீணடித்தது ஏன்? எனக் கேள்வியெழுப்பினார்.

சங்கராபுரம் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் சொக்கலிங்கம்


கடந்த 2019 -ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகளால் முதலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவித்து பின்னர் பிரியதர்ஷினி அய்யப்பன் வெற்றிபெற்றதாக சான்றிதழ் வழங்கினார் தேர்தல் அதிகாரி. இதனை எதிர்த்து தேவி மாங்குடி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பில் தேவி மாங்குடி வெற்றி அறிவிப்பு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் பிரியதர்ஷினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பிற்கு இடைக்கால தடை பெற்றனர். இந்த வழக்கில் அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக ஊராட்சி பொது நிதியிலிருந்து 36,17,500 வழங்கப்பட்டுள்ளது.

இந்த பொது நிதி வழங்கப்பட்டதை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கிற்கும் ஊராட்சி பொதுநிதியிலிருந்துதான் கொடுக்கப்படும் என்கின்றனர். தனிப்பட்ட இருவின் வழக்குகாக வழக்கறிஞர்களுக்கு முதல் கட்டணமாக ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.36,17,500 கொடுக்கப்பட்டது என்றால் வழக்கு முழுவதற்கும் ஊராட்சியின் மொத்த பொதுநிதியும் கொடுத்து விட்டால் , ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கு என்னசெய்வார்கள். சங்கராபுர மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் கேள்விக்குறியாகிறது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்