முக்கிய செய்திகள்

தந்தை பெரியாரின் 46-வது நினைவு தினம் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..

தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.