பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம்..

கரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக ‘பி.எம்.கேர்ஸ் நிதியம்’ எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம், கடந்த மார்ச்.28ல் தொடங்கப்பட்டது
கரோனா வைரஸ் தொற்றுநோய்க்காக சேகரிக்கப்பட்ட பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், பி.எம்.கேர்ஸ் நிதியால் சேகரிக்கப்பட்ட நிதி முற்றிலும் வேறுபட்டது, இந்த நிதிகள் தொண்டு அறக்கட்டளையின் நிதிகள் ஆகும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு பி.எம்.கேர்ஸ் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி, சி.பி.சி.எல், எனும் தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. பி.எம் கேர்ஸ் நிதி பேரிடர் மேலாண்மை சட்டத்தின் விதிகளை மீறுவதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

கரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக ‘பி.எம்.கேர்ஸ் நிதியம்’ எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியம், கடந்த மார்ச்.28ல் தொடங்கப்பட்டது.

நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியது.

அதில், பி.எம் கேர்ஸ் நிதியில் சேகரிக்கப்பட்ட நிதி அறக்கட்டளைக்குரியது என்பதைக் உறுதிப்படுத்தி உள்ளோம். ஆ

கவே கரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக புதிய தேசிய பேரிடர் திட்டம் ஏதும் தேவையில்லை.