“பாதங்களைப் பாதுகாப்போம்” : காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடக்கம்…

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் சர்க்கரை(நீரழிவு) நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாக்க தனிப் பிரிவை உலக நீரழிவு தினத்தை (நவம்பர்-14 ) முன்னிட்டு தொடங்கியுள்ளது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேரின் பாதங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்பு முற்றி சில நேரங்களில் கால்களே நீக்கப்படும் நிலைக்குச் செல்கின்றனர்.

உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. முறையாக கால்களுக்கு ரத்தம் செல்லாததால் பாதங்கள் பாதிப்படைகின்றன. பின்னர் கால்கள் கருத்து போகும் இறுதியாக கால்களை வெட்டி எடுக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்களை முறையாக கவனித்து உரிய சிகிச்சையளித்தால் பாதங்களைப் பாதுகாக்கலாம், தங்போதைய நவீன முறையில் சர்க்கரை நோயாளிகளின் பாதங்களை ஆரம்ப கட்டத்தில் கவனித்து முறையாக சிகிச்சை பெற்றால் பாதங்களை பாதுகாக்கலாம்.

இந்த சிகிச்சைப் பிரிவில் இரத்த நாள சிறப்பு மருத்துவர்,சர்க்கரை மருத்துவர், எலும்பியல் மருத்துவர் இணைந்து சிகிச்சையளிக்கவுள்ளனர்.

சர்க்கரை நோயாளிகளின் பாதாங்களைப் பாதுகாப்போம் தொடக்க விழாவில் இரத்த நாள சிறப்பு மருத்துவர் டாக்டர் ராகுல், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் திருப்பதி, எலும்பியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆசை செல்வம் கலந்து கொண்டனர். சர்க்கரை நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாப்பது குறித்து விளக்கமளித்தனர்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் துணை நோயாளும் பாதிக்கப்படுவார்கள். இருதய அடைப்ப குறித்து அறிந்தவர்கள்பாதங்கள் பாதிப்பு குறித்த அறியவில்லை கிராமபுற மக்களுக்கு பயன் பெறும் வகையில் அப்பலோ ரீச் மருத்துவமனை சர்க்கரை நோயாளிகளின் பாதங்களைப் பாதுகாக்க தனிப்பிரிவை தொடங்கியுள்ளது என்றார் முதன்மை அதிகாரி பி.நீலகண்ணன்.

சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் திருப்பதி பேசும் போது சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து விடுபட இணைந்த மருத்துவமுறையே சிறந்தது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் கால்கள் கருத்துப்போகுதல், இலேசான புண்கள் இவற்றை சாதாரணமாக எடுத்துக் கொண்டு மருத்துவரை அணுகாமல் கை வைத்தியம் செய்கின்றனர். புண்கள் ஆறாமல் முற்றிய பிறகு கால்,விரல்களை எடுக்கும் நிலையில் தான் மருத்துவர்களை அணுகுகின்றனர். சர்க்கரை நோயாளிகள் இதய அடைப்புக்கு கொடுக்கம் முக்கியத்துவம் போல் கால் பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும்.

இரத்த நாள சிறப்பு மருத்துவர் டாக்டர் ராகுல் பேசும் போது இரத்த ஓட்டம் இதயத்திற்கு சீராக செல்லாமல் எப்படி அடைபட்டு இருதய அடைப்பு ஏற்படுகிறதோ, அதுபோல்தான் பாதங்களுக்குச் செல்லும் இரத்த நாளங்களில் சர்க்கரை அதிகரிப்பு காரணமாக அடைப்பு ஏற்பட்டு சீரான இரத்த ஓட்டம் இல்லாமல் போவதால் காலில் புண்கள் ஏற்பட்டு அவை எலும்புகள் வரை செல்லரித்து விடுகின்றன. பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் வலி தெரிவதில்லை அதனால் புண்கள் பெரிதாகி சருமம், தசை எழும்பு வரை அரிப்பது தெரியாமல் போய்விடுகிறது.

பாதங்களில் சிறு புண் அல்லது கருத்துப் போகும் போது உடனே மருத்துவரை அணுகினால் பாதங்களை பாதுகாக்க முடியும், சீரான இரத்த ஓடட்டம் காலில் இல்லாததால் பாதங்கள் சில நேரங்களில் அரிப்புடன் புண்ணாக மாறுகிறது. ஆரம்பத்தில் இருந்து முறையாக சிகிச்சை மேற் கொண்டால் பாதங்களை பாதுகாக்கலாம். தற்போது அப்பலோரீச் மருத்துவமனை தொடங்கியுள்ள இப்பிரிவின் மூலம் உடலில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தி கால்களை அகற்றுவதிலிருந்து பாதுகாக்கலாம் என்றார்.

எலும்பியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆசை செல்வம் பேசும் போது சர்க்கரை நோயாளிகள் இருதய அடைப்பு, சிறுநீரக பாதிப்பு,கண்பாதிப்பு என்பதை மட்டுமே அறிந்து வைத்துள்ளனர். சர்க்கரை நோயாளிகன் எலும்பு பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இரத்த ஓட்டம் கால்களுக்கு சீராக இல்லாத காரணத்தால் கால்களின் பாதங்களில் ஏற்படும் புண்கள் மெதுவாக அறித்து எலும்புகளை சென்றடைகின்றன. முதலில் எலும்புகள் வலுவிழந்து படிப்படியாக அரிக்கப்படுவதால் கால்களை வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்குச் செல்கின்றனர்.

ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தக் கொண்டால் பாதங்களைப் பாதுகாக்கலாம், சிறப்பு சிகிச்சை பிரிவை அணுகினால் போதிய சிகிச்சையளித்து பாதங்களையும் எலும்புகளையும் பாதுகாக்கலாம். பொதுவாக கை. கால்கள் வலி அல்லது வீக்கம் எற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
விழாவில் திரு பி.நீலகண்ணன், முதன்மை அதிகாரி அப்பலோ மருத்துவக் குழுமம் மதுரை, அப்பலோ ரீச் மருத்துவமனை முதன்மை அதிகாரி லாவண்யா,மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கோகுல் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்