முக்கிய செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடு..

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியடப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இந்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஜூன் 15-ம் தேதி 10 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஜூன் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் நடக்கின்றன.

இதற்கான ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்,

இன்று பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களும் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.