புதுச்சேரி 2022-23 பட்ஜெட் : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு..

2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மாநில முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் சமர்பித்து வருகிறார். அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும் என்றும் காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். மேலும் காரைக்காலில் புதிய மருத்துவக் கல்லுாரி அமைக்கப்படும் எனவும் பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த 2022-2023-க்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ளது .