முக்கிய செய்திகள்

புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு..


புதுக்கோட்டை, விடுதி என்ற கிராமத்தில், நேற்று நள்ளிரவில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த பெரியார் முழு உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. போலீசாரும் அந்தப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.